50,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

50,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக நெல் கொள்வனவு

by Staff Writer 25-04-2019 | 1:19 PM
Colombo (News 1st) நெல் சந்தைப்படுத்தல் சபை, 50,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து நாடு மற்றும் சம்பா வகை நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டரிசி நெல்லினை 41 ரூபாவிற்கும் சம்பா நெல்லினை 38 ரூபாவிற்கும் விற்பனை செய்வதற்கான வசதிகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியாகவுள்ள 200 நெற்களஞ்சியசாலைகளில் இந்தக் கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் குறித்த சபை அறிவித்துள்ளது.