ரஷ்ய - வட கொரிய ஜனாதிபதிகள் இடையே சந்திப்பு

ரஷ்ய - வட கொரிய ஜனாதிபதிகள் இடையேயான முதலாவது சந்திப்பு இன்று

by Staff Writer 25-04-2019 | 6:47 AM
Colombo (News 1st) ரஷ்ய மற்றும் வட கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (25ஆம் திகதி) காலை இடம்பெறவுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள விளாடிவொஸ்ரொக் நகருக்கு அருகேயுள்ள ருஷ்கி தீவில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் அணுவாயுத பிரச்சினை தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவுடனான உறவுகளைக் கட்டியெழுப்புவதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கமென வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடன் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது. இந்தச் சந்திப்பிற்காக வட கொரிய ஜனாதிபதி ரயில் மூலம் நேற்றைய தினம் ரஷ்யாவைச் சென்றடைந்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.