by Staff Writer 25-04-2019 | 4:25 PM
Colombo (News 1st) நுவரெலியா ஹவா எலிய பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரால் இன்று பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹாவா எலிய பகுதியிலுள்ள ஆறு ஒன்றிலிருந்து டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.