ஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை

by Bella Dalima 25-04-2019 | 6:58 PM
Colombo (News 1st) நாளைய தினம் (26) ஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பலர் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை கருதி இதனை அறிவித்துள்ளதாக முஸ்லிம் மத விவகார அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில், விசேடமாக நகர்ப்புறங்களில் பாதுகாப்புக் கருதி ஜூம்மா தொழுகையினைத் தவிர்த்துக்கொள்வது சிறந்தது எனவும் அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் பள்ளிவாசல்களைத் தாக்கும் அபாயம் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதால், இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் சுட்டிக்காட்டியுள்ளார்.