குண்டுத் தாக்குதல்கள் குறித்த சர்வதேசத்தின் பார்வை

தொடர் குண்டுத் தாக்குதல்கள் குறித்த சர்வதேசத்தின் பார்வை

by Staff Writer 25-04-2019 | 2:25 PM
Colombo (News 1st) நாட்டில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் பிரெஞ்ச் ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் பயமின்றி வாழ்வதற்கு உரிமையுள்ளது. இந்த மோசமான குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. அதற்கு நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டியுள்ளது. நாம் அதை மீள செய்வதற்கு தயாராகவுள்ளோம் என பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். அதேநேரம், குறித்த தாக்குதலுக்க நாம் கண்டனம் தெரிவிக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கின்றேன். பிரான்ஸ், இலங்கை போன்ற சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாம் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவோம் என ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்