பிரிட்டனின் விசேட பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை

குண்டுத் தாக்குதல்கள்: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியாவின் விசேட பிரதிநிதிகள் வருகை

by Staff Writer 25-04-2019 | 7:56 AM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான பிரித்தானியாவின் விசேட பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தரவுள்ளனளர். குறித்த விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என, பிரித்தானிய வௌிவிவகார செயலாளர் ஜெரம் ஹன்ட் தெரிவித்துள்ளார். இதனைத்தவிர, இந்தக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பிரித்தானிய பிரஜைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக, அந்நாட்டின் விசேட குழுவினர் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய வௌிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பயங்கரவாதத்தை ஒடுக்குதவற்கான முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, தொலைபேசியூடாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.