உலகக்கிண்ணத்திற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

by Bella Dalima 25-04-2019 | 4:19 PM
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. IPL கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தி வரும் சகலதுறை ஆட்டக்காரரான ஆன்ட்ரே ரஸல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். பொல்லர்ட், சாமுவேல் ஆகியோருக்கு குழாத்தில் இடம் கிடைக்கவில்லை. உபாதைக்குள்ளான சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனும் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. 39 வயதான கிறிஸ் கெய்ல் தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். இது அவருக்கு 5 ஆவது உலகக்கிண்ண போட்டியாகும். அணியினர்: ஜேசன் ஹோல்டர் (C), கிறிஸ் கெய்ல், ஆன்ட்ரே ரஸல், ஷெல்டன் கொட்ரெல், ஷனோன் கெப்ரியல், கெமர் ரோஜ், நிக்கலஸ் பூரன் (wk), ஆஷ்லி நர்ஸ், ஃபெபியன் அலன், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப் (wk), ஒஷேன் தோமஸ், கார்லஸ் ப்ரத்வெயிட், டெரன் ப்ராவோ, எவின் லெவிஸ்.