இருநாட்டு உறவு குறித்து ரஷ்ய, வட கொரிய ஜனாதிபதிகள்

இருநாட்டு உறவை வலுப்படுத்துவதாக ரஷ்ய, வட கொரிய ஜனாதிபதிகள் உறுதி

by Staff Writer 25-04-2019 | 1:29 PM
Colombo (News 1st) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். ரஷ்யாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள துறைமுக நகரான விளாடிவொஸ்ரொக்கிற்கு அருகில் அமைந்துள்ள ருஷ்கி தீவிலேயே, இருநாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது இடம்பெறுகின்றது. இந்தச் சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றையும் உறவுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். கொரியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணித்து அமைதியை ஏற்படுத்துவதற்கான உதவிகளை ரஷ்யா வழங்க வேண்டியுள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதற்கான மிகச்சிறந்த சந்திப்பாக இது அமையும் என வட கொரிய ஜனாதிபதி கிம் ​ஜோங் உன் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.