Controlled Explosion - Detonation என்றால் என்ன?

Controlled Explosion அல்லது Controlled Detonation என்றால் என்ன?

by Bella Dalima 24-04-2019 | 4:11 PM
Colombo (News 1st) Controlled Explosion அல்லது Controlled Detonation - (கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாப்பாக வெடிக்க வைப்பது அல்லது செயலிழக்க வைப்பது) எனும் சொற்பதங்கள் தொடர்பில் நிலவும் குழப்பத்தை தௌிவுபடுத்திக்கொள்ள இராணுவ ஊடகப் பிரிவினை தொடர்புகொண்டு வினவினோம். சுற்றியுள்ள உயிர்களுக்கும் அதனை சோதனையிட அனுப்பப்படுபவருக்கும் உயிர் அச்சுறுத்தலாய் விளங்கும் சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டால், அதிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற இராணுவ அதிகாரிகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே Controlled Explosion அல்லது Detonation என அழைக்கப்படுவதாக இராணுவ ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. எனினும், Controlled Explosion அல்லது Detonation முன்னெடுக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்களாய் அர்த்தப்படாது. எளிதாகக் கூறுவதென்றால், அச்சுறுத்தல் விடுக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படும் பட்சத்தில், அதிகாரிகளால் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை தந்திரோபாயமே Controlled Explosion அல்லது Detonation எனப்படும்.