37 பேருக்கு சவுதியில் மரணதண்டனை நிறைவேற்றம்

தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதியில் மரணதண்டனை நிறைவேற்றம்

by Bella Dalima 24-04-2019 | 4:41 PM
தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு , போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புக் கட்டடங்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதல் மேற்கொண்டு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்காகவும் பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி, நாட்டின் நலனுக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்திற்காகவும் 37 பேருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதக் குற்றங்களை விசாரணை செய்வதற்கான சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளையடுத்து இவர்களுக்கான மரணதண்டனை விதிக்கப்பட்டதாக சவுதி உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வழமையாக தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், இருவரை பொதுவௌியில் கம்பங்களில் ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றியமை விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.