ட்விட்டரின் இணை ஸ்தாபகரை சந்தித்தார் ட்ரம்ப்

ட்விட்டரின் இணை ஸ்தாபகரை சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

by Chandrasekaram Chandravadani 24-04-2019 | 11:31 AM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ட்விட்டரின் இணை ஸ்தாபகர் ஜெக் டோர்ஸிக்கும் (Jack Dorsey) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க பொதுத்தேர்தல் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பொதுக்கருத்துப் பரிமாற்றங்களின் தராதரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ட்விட்டர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வௌ்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன், ட்விட்டரின் இணை ஸ்தாபகர் ஜெக் டோர்ஸி கலந்துகொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட நிழற்படமொன்றை தமது ட்விட்டர் தளத்தில் வௌியிட்ட ட்ரம்ப், சந்திப்பு சிறப்பாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ட்விட்டர் மிகுந்த பாகுபாடுகள் நிறைந்ததாகக் காணப்படுவதாக முன்னர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.