செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-04-2019 | 6:37 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கிடைத்துள்ள தகவலுக்கு அமைய, தாக்குதல்தாரிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிமல் லெவ்கே நிமல் லெவ்கே குறிப்பிட்டுள்ளார். 02. புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்யுமாறு கோரி தனிநபர் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷூ மாரசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 03. நாட்டில் பல பாகங்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 04. இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. 05. நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை ஜனாதிபதிக்கு வழங்குவதாக, வௌிநாட்டு தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர். 06. நியூசிலாந்திலுள்ள பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கிலேயே ஈஸ்டர் தினத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 07. வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  08. வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்திச் செல்வதாயின், தொலைபேசி இலக்கம் மற்றும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணத்தை வாகனத்தின் முற்பகுதியில் காட்சிப்படுத்திவிட்டு செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 09. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தாமும் அமெரிக்க மக்களும், இலங்கையுடன் கைகோர்த்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 10. அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 11. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் டென்மார்க் நாட்டு செல்வந்தரான அன்டர்ஸ் போல்சனின் 3 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை (Vladimir Putin) சந்திப்பதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) விரைவில் ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளார் என்பதை, வட கொரிய அரச செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 02. இந்திய மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று இடம்பெற்றுள்ளது.