கேரளாவில் அதிகபட்ச வாக்குகள் பதிவு

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம்: கேரளாவில் அதிகபட்ச வாக்குகள் பதிவு

by Bella Dalima 24-04-2019 | 5:15 PM
இந்திய மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நிறைவு பெற்றுள்ளது. அநேகமான மாநிலங்களில் 64 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலுள்ள 116 மக்களவைத் தொகுதிகளில் 64.66 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாதளவான அதிகபட்ச வாக்குகள் இம்முறை மக்களவைத் தேர்தலில் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நேற்று (23) நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் 77.68 வீதமான வாக்காளர்கள் தமது வாக்கினைப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இம்முறை மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்கான வாய்ப்பு 50 வீதம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி போட்டியிடுகின்ற வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆலோசித்து வருகின்றனர்.