தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு இலங்கை இந்துமா மன்றம் கண்டனம்

தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு இலங்கை இந்துமா மன்றம் கண்டனம்

தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு இலங்கை இந்துமா மன்றம் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2019 | 1:26 pm

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக, அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாக மன்றம் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தோரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன், உறவுகளை இழந்துநிற்கும் குடும்பத்தினரின் துயரில் பங்குகொள்வதாகவும் இந்துமா மன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடுவதுடன் விசாரணைகளின்போது பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்வதுடன் துயரச் சம்பவங்கள் ஒருசேர நிகழும்போது எவ்வித பிரிவினையும் இன்றி சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் செயற்படுமாறு இந்துமா மன்றம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்