சந்தேகத்திற்கிடமானவை என அறிவிக்கப்பட்டவற்றில் இரு வாகனங்கள் கண்டுபிடிப்பு

சந்தேகத்திற்கிடமானவை என அறிவிக்கப்பட்டவற்றில் இரு வாகனங்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2019 | 11:43 am

Colombo (News 1st) வரக்காபொல – அங்குருவெல்ல பகுதியில் வீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் வேனொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு நடத்திய சோதனையின்போது குறித்த வீட்டிலிருந்து மோட்டார்சைக்கிளொன்று மற்றும் 04 தொடர்பாடல் உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட குறித்த வேன் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தவை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த வீட்டில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் ஹேம்மாத்தகம பொலிஸ் பிரிவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்