உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2019 | 6:53 pm

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கொழும்பு – ஷங்ரில்லா, சினமன்ட் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள தங்குமிடம் மற்றும் தெமட்டகொட மஹவில பூங்கா வீதியிலுள்ள வீடொன்றிலும் சந்தேகநபர்கள் சிலர் குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல்களில் உயிரிழந்த 39 வௌிநாட்டவர்களில், 20 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்