விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்

விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 'லாபம்'

by Chandrasekaram Chandravadani 23-04-2019 | 10:31 AM
Colombo (News 1st) மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் ‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. ஈ மற்றும் பேராண்மை உள்ளிட்ட பல படங்களின் இயக்குநரான எஸ்.பி. ஜனநாதனே, லாபம் படத்தையும் இயக்குகின்றார். மேலும், டி. இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தமிழ் படங்களில் நீண்டகால இடைவௌியின் பின்னர் இணைந்துள்ள ஸ்ருதி ஹாசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.