வட கொரிய தலைவர் - ரஷ்ய ஜனாதிபதி இடையே சந்திப்பு

வட கொரிய தலைவர் - ரஷ்ய ஜனாதிபதி இடையே சந்திப்பு

by Chandrasekaram Chandravadani 23-04-2019 | 10:08 AM
Colombo (News 1st) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை (Vladimir Putin) சந்திப்பதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) விரைவில் ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளார் என்பதை, வட கொரிய அரச செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது கிம் ஜோங் உன் மற்றும் விளாடிமிர் புட்டினுக்கு இடையிலான முதலாவது சந்திப்பாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. இச் சந்திப்பு இடம்பெறவுள்ள திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இம்மாதத்தின் இரண்டாம் அரைப்பகுதியில் சந்திப்பு இடம்பெறும் என கிரெம்ளின் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, குறித்த இந்த சந்திப்பு ரஷ்யாவின் விளாடிவோஸ்டொக் நகரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.