தாக்குதல்தாரிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது: நிமல் லெவ்கே

by Bella Dalima 23-04-2019 | 9:29 PM
Colombo (News 1st) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் லெவ்கே, கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், நியூஸ்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார். தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையால், தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அல்லது அவர்களின் பின்புலம் தொடர்பில் எவ்விதத் தகவல்களையும் கூற முடியாது. எனினும், தனக்கு கிடைத்துள்ள தகவலுக்கு அமைய, தாக்குதல்தாரிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என நிமல் லெவ்கே குறிப்பிட்டார். தாக்குதல்தாரிகள் சில வீடுகளை வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும் TATP வெடிபொருளையே அவர்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் நிமல் லெவ்கே மேலும் தெரிவித்தார். Acetone Peroxide எனும் குறித்த இரசாயனப்பொருளை அல்கய்தா போன்ற அமைப்புகளே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், TNT வெடிபொருளை விடவும் TATP மிகவும் சக்திவாய்ந்தது என குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்