டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகள் மூவர் பலி

குண்டுத் தாக்குதலில் டென்மார்க் செல்வந்தர் அன்டர்ஸ் போல்சனின் பிள்ளைகள் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 23-04-2019 | 11:57 AM
Colombo (News 1st) கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் டென்மார்க் நாட்டு செல்வந்தரான அன்டர்ஸ் போல்சனின் (Anders Holch Povlsen) 3 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். போல்சன் மற்றும் அவரது மனைவி ஏண் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்திலேயே, இந்த அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர். அல்மா, எஸ்ட்ரிட், எக்னஸ், அல்பரட் ஆகிய 4 பிள்ளைகளில் மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் மாத்திரம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். எனினும், நால்வரில் எந்த பிள்ளை உயிர்தப்பியது என்பது தொடர்பில் தகவல்கள் வௌியாகவில்லை. என்டர்ஸ் ஹோல்ச் போல்சன் பிரித்தானியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனிப்பட்ட அசையா சொத்துக்களுக்கு உரிமையாளர் என்பதுடன், அவர் ஸ்கொட்லாந்திலும் பெருமளவு காணிக்கு உரித்துடையவராவார். போர்ட்ஸ் சஞ்சிகையின் பிரகாரம், என்டர்ஸ் ஹோல்வ் போல்சனின் சொத்து மதிப்பு 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எதிர்கால சந்ததியினருக்காக தமக்கு உரித்தான காணி நிலங்களை வனப்பிரதேசங்களாக மாற்றுவதற்கு 200 வருட கால திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு போல்சன் தம்பதியினர் திட்டமிட்டிருந்ததுடன், எதிர்காலத்தில் அவர்களின் பிள்ளைகள் அந்த திட்டத்தை முன்னெடுத்து செல்வார்கள் என இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.