அவசரகால அமுலுக்கான அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

அவசரகால அமுலுக்கான அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 23-04-2019 | 7:44 AM
Colombo (News 1st) அவசரகால சட்டம் அமுலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் தொடர்புடைய சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று (22ஆம் திகதி) நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக, இந்த இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவதன் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க சட்டத்தினாலும் தேசிய அரச பேரவையின் 1978ஆம் ஆண்டு 6ஆம் இலக்க சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டு 28ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்து மாத்திரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பயங்கரவாத ஒழிப்புக்கான சரத்து அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்