இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

by Bella Dalima 23-04-2019 | 4:47 PM
Colombo (News 1st) இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தி முகவர் நிறுவனத்தை மேற்கோள் காட்டி ரொய்ட்ர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றமைக்கான காரணங்களை அவர்கள் வௌிப்படுத்தவில்லை எனவும் ரொய்ட்ர்ஸ் குறிப்பிட்டுள்ளது.