யுக்ரைனின் ஜனாதிபதியானார் நகைச்சுவை நடிகர்

யுக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் நகைச்சுவை நடிகர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கை வெற்றி

by Staff Writer 22-04-2019 | 3:09 PM
Colombo (News 1st) யுக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் நகைச்சுவை நடிகர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கை (Volodymyr Zelensky) வெற்றி பெற்றுள்ளார். யுக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் முதற்கட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டின் தொலைக்காட்சி விலாடிமிர் ஸெலென்ஸிகி, 70 வீத வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றிருந்தார். தேர்தலில், 41 வயதான ஸெலென்ஸிகி, சமகால ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ மற்றும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட 39 வேட்பாளர்களை பின்தள்ளி அவர் முன்னிலையிலிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் சமகால ஜனாதிபதியும் தேர்தலில் போட்டியிட்ட பின்னணியில் அவர்கள் அனைவரையும் விட நகைச்சுவை நடிகர் முன்னிலையிலிருப்பதாக தேர்தலுக்கு முன்னர் வௌியான கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்திருந்தன. எவ்வாறாயினும், எந்தவொரு வேட்பாளராலும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, நேற்றைய தினம் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன. இந்நிலையில், தேர்தலில் 73.27 வீத வாக்குகளை பெற்று ஸெலென்ஸ்கை அமோக வெற்றி பெற்றுள்ளதுடன், ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ 24.39 வீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.