உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

by Staff Writer 21-04-2019 | 7:08 AM
Colombo(News 1st) உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்று (21ஆம் திகதி) இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தங்களின் வாழ்த்து செய்திகளை வௌியிட்டுள்ளனர். சகலவித இம்சைகளும் தொந்தரவுகளும் அற்ற அமைதியான ஒரு இடமாக உலகம் அமைகின்ற போதே, அது மனிதர்களின் அமைதியான தங்குமிடமாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதிகாரத்திற்காகவோ, பணத்திற்காகவோ விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை என்பது தௌிவாகின்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பின்னணியின் அன்பு, அமைதி, அந்நியோன்ய புரிந்துணர்வுடன் எழுந்துநிற்கும் மானிட சமூகத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்புடனேயே உயிர்த்த ஞாயிறு உதயமாகவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மனித வாழ்வின் அனைத்து சவால்கள் மற்றும் போராட்டங்களின் இறுதியில் ஒர் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது என்பதை உயிர்த்தெழுந்த ஞாயிறு எடுத்துக் கொட்டுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வௌிச்சத்தை நோக்கிய பாதை கடினமாணதாக காணப்பட்ட போதிலும், அன்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றினூடாக வெற்றியடைய முடியும் என்பதை இயேசுபிரான் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.