புதிய பிரேரணையில் சிக்கல் – தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

புதிய பிரேரணையில் சிக்கல் – தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

புதிய பிரேரணையில் சிக்கல் – தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2019 | 7:54 am

Colombo(News 1st) கணக்காய்வு சேவைக்கான யாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அதிகாரிகளுக்கு இயலாதுள்ளதாக, தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

யாப்பில் காணப்படக்கூடிய சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட புதிய பிரேரணையில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் கணக்காய்வு சேவை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கணக்காய்வு ஆணைக்குழுவிற்கான சட்டத்தின்படி அதே வருடம் நவம்பர் மாதம் சேவை யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த யாப்பில் சம்பளம் மற்றும் பணியாளர் எண்ணிக்கை உள்ளிட்ட பல சிக்கல்கள் காணப்படுவதாக இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் செயலாளர் டப்ளியூ.ஜே.சி. திசேரா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தால் நியமிக்கப்பட்ட குழுவினூடாக பரிந்துரைக்கப்பட்ட யாப்பினை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக கணக்காய்வு சேவைக்கான புதிய யாப்பை விரைவில் தயாரிக்குமாறு இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் செயலாளர் டப்ளியூ.ஜே.சி. திசேரா வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்