தெஹிவளை ஹோட்டல் ஒன்றில் வெடிச் சம்பவம்; இருவர் பலி

தெஹிவளை ஹோட்டல் ஒன்றில் வெடிச் சம்பவம்; இருவர் பலி

தெஹிவளை ஹோட்டல் ஒன்றில் வெடிச் சம்பவம்; இருவர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Apr, 2019 | 2:51 pm

Colombo (News 1st) தெஹிவளை மிருக்காட்சிச் சாலைக்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், ஆணொருவரும் பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக, களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் காயமடைந்த சிலர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையை கருத்தில்கொண்டு தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையை இன்று திறக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்