சூடானின் முன்னாள் ஜனாதிபதி வீட்டிலிருந்து பாரிய தொகை பணம் மீட்பு

சூடானின் முன்னாள் ஜனாதிபதி வீட்டிலிருந்து பாரிய தொகை பணம் மீட்பு

சூடானின் முன்னாள் ஜனாதிபதி வீட்டிலிருந்து பாரிய தொகை பணம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2019 | 7:48 am

Colombo (News 1st) பதவி கவிழ்க்கப்பட்ட சூடானிய ஜனாதிபதி ஓமர் அல் பஷீரின் (Omar al – Bashir) இல்லத்திலிருந்து பாரிய தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் அமெரிக்க டொலர், யூரோ மற்றும் சூடான் பவுண்ட்ஸ் ஆகியன அடங்கலாக 130 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஊழல் மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர், ஓமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்