சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Apr, 2019 | 6:06 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சேயோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

02. மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

03. அனைவரையும் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்வதற்கான புதிய திட்டமொன்றை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.

04. இராவணா – 1 செய்மதி சர்வதேச விண்வௌி மத்திய நிலையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

05. மஸ்கெலியா – லக்‌ஷபான தோட்டத்தில் நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபா பிணையில்லாக் கடன் வழங்குவதாக நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

02. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பில் ஒளிபரப்பப்படும் இணையத் தொடரை நிறுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

01. சீனாவில் நடைபெறும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கான முதல் பதக்கத்தை டிலந்த இசுரு குமார வென்றுள்ளார்.

02. ஆசியக்கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்