வெடிச் சம்பவங்களின் பலி எண்ணிக்கை 190 ஆகியது

வெடிச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்வு

by Staff Writer 21-04-2019 | 9:47 AM
* நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காயமடைந்த 469 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். * நாட்டின் 6 இடங்களில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிழப்பு; 370 பேர் வரை காயம்
6 இடங்களில் வெடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 1) கொழும்பு - கொச்சிக்கடை தேவாலயம் 2) நீர்கொழும்பு - கட்டுவாபிட்டி தேவாலயம் 3) கொழும்பு, ஷங்கரிலா ஹோட்டல் 4) மட்டக்களப்பு, சீயோன் தேவாலயம் 5) கொழும்பு, சின்னமன் ஹோட்டல் 6) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல் உயிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - கட்டுவாபிட்டி தேவாலயம் : 50 பேர் சீயோன் ஆலயம் 25 பேர் , 75 பேர் காயம் கொழும்பு தேசிய வைத்தியசாலை – 24 பேர் --------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றனர். இதுவரை 50 க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் கொண்டு வரப்படுவதாக வைத்தியசாலை வளாகத்திலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.