இராவணா - 1  விண்வௌி மத்திய நிலையத்திடம் கையளிப்பு

இராவணா - 1 செய்மதி சர்வதேச விண்வௌி மத்திய நிலையத்திடம் கையளிப்பு

by Staff Writer 20-04-2019 | 3:39 PM
Colombo (News 1st) இராவணா - 1 செய்மதி சர்வதேச விண்வௌி மத்திய நிலையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட இராவணா - 1 செய்மதி, அமெரிக்காவின் - வெர்ஜினியாவிலுள்ள நாசா நிறுவனத்திற்கு சொந்தமான விண்வௌி நிலையத்திற்கு கடந்த 18 ஆம் திகதி அனுப்பப்பட்டது. இது Nano செய்மதி என்பதுடன், இலங்கையர்கள் தயாரித்த முதலாவது செய்மதியாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிந்து தயாரத்ன மற்றும் தாய்லாந்திலுள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டதாரியான துலானி சாமிகா விதானகே ஆகிய இருவரும் இணைந்து இராவணா - 1 செய்மதியை தயாரித்துள்ளனர். ஜப்பானின் கியூஷூ தொழில்நுட்ப நிறுவனத்தில், விண்வௌி பொறியியல் தொழில்நுட்பம் தொடர்பில் கல்வி கற்ற சந்தர்ப்பத்தில், இவர்கள் இந்த செய்மதியை தயாரித்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி அதிகாலை 2.16 மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்ட இராவணா - 1 செய்மதி, எதிர்காலத்தில் பூமியைச் சுற்றி நாளொன்றுக்கு 15 தடவைகள், 7.6 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கவுள்ளது.