வல்வெட்டித்துறையில் இரு தரப்பினரிடையே மோதல்: 8 பேர் காயம்

வல்வெட்டித்துறையில் இரு தரப்பினரிடையே மோதல்: 8 பேர் காயம்

வல்வெட்டித்துறையில் இரு தரப்பினரிடையே மோதல்: 8 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2019 | 4:29 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஊரணி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வல்வெட்டித்துறையில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, கத்தி மற்றும் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தாக்குதலின் போது இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்