மஸ்கெலியாவில் அன்னதானம் உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மஸ்கெலியாவில் அன்னதானம் உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மஸ்கெலியாவில் அன்னதானம் உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2019 | 3:47 pm

Colombo (News 1st) மஸ்கெலியா – லக்ஷபான தோட்டத்தில் நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லக்ஷபான தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது நேற்றிரவு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை உட்கொண்டதன் பின்னர் வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுவலி உள்ளிட்ட குணங்குறிகளுடன் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவர்களில் 07 சிறார்களும். 25 பெண்களும் 11 ஆண்களும் அடங்குவதாக அவர் கூறினார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்