ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்

ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்

ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயம்

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2019 | 4:58 pm

Colombo (News 1st) ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஊடகவியலாளரும் யாழ். ஊடக அமையத்தின் போசகருமாகிய இரட்ணம் தயாபரன், உடுப்பிட்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து புத்தூர் சந்தியில் நேற்று (19) நண்பகல் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இரட்ணம் தயாபரன் பயணித்த மோட்டார் சைக்கிளை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோதி விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி தப்பிச்சென்றுள்ளதுடன், அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரான் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்