இலங்கை தமிழரசுக் கட்சி இளைஞரணிக்கு புதிய தலைவர் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சி இளைஞரணிக்கு புதிய தலைவர் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2019 | 4:22 pm

Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை சேயோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இளைஞரணியின் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுப்பிரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற இளைஞரணி மாநாட்டின் போது இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு பகுதிக்கான இளைஞர் அணி மாநாடும் நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதன்போது, வவுனியா நகர மண்டபத்தை சூழ பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்