சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வௌ்ளி இன்று

மனுக்குமாரனின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வௌ்ளி இன்று

by Staff Writer 19-04-2019 | 3:18 PM
Colombo (News 1st) மனித குலத்தை பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும் இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து, சிலுவையில் இறந்த மனுக்குமாரனின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வௌ்ளி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகவாழ் கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தில் சிலுவைப் பாதையை மேற்கொண்டு இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்கின்றனர். இன்றைய தினம், இத்தாலி - ரோமிலுள்ள தேவாலயங்களில் உள்ள சிலைகள் கறுப்பு மற்றும் நாவல்நிற துணிகளால் மூடப்பட்டு பெரிய வௌ்ளி அனுஷ்டிக்கப்படுகின்றது. ஜெருசலேம் நகரில் அனைத்து கிறிஸ்தவர்களும் சிலுவைகளை சுமந்த வண்ணம் இயேசு கிறிஸ்து உயிரிழந்த பகுதி வரை ஊர்வலமாக சென்று இந்நாளை நினைவுகூர்கின்றனர். லண்டனில் ட்ரெவெல்கர் சதுக்கத்தில் சிலுவைப் பாதை இடம்பெறுவதுடன், இதன்போது வீதி நாடகங்களும் நடைபெறுகின்றன. இதில் நூற்றுக்கும் அதிகமான விலங்குகளும் பங்கேற்றுள்ளன. மத்திய அமெரிக்க நாடுகளான ஹொண்டூரஸ், எல்சல்வடோர், குவாத்தமாலா நாடுகளில் மக்கள் இன்றைய தினத்தில் வீதிகளில் ஓவியங்களை வரைந்து பெரிய வௌ்ளியை நினைவுகூர்கின்றனர்.

ஏனைய செய்திகள்