சைபர் பாதுகாப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

சைபர் பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

by Staff Writer 19-04-2019 | 3:42 PM
Colombo (News 1st) சைபர் பாதுகாப்பு தொடர்பில் புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலமொன்றை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. சைபர் பாதுகாப்பு தொடர்பில் நாட்டில் உரிய சட்ட திட்டங்கள் இல்லை என அமைச்சர் அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் முதற்தரம் வாய்ந்த Cybersecurity Act எனும் பெயரிலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம் கணினி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் ஊடுருவ முயற்சிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.