வாகனங்களை இடது பக்கமாக முந்திச்செல்வதற்காக அறவிடப்படும் 25,000 ரூபா தண்டப்பணத்தில் திருத்தம்

வாகனங்களை இடது பக்கமாக முந்திச்செல்வதற்காக அறவிடப்படும் 25,000 ரூபா தண்டப்பணத்தில் திருத்தம்

வாகனங்களை இடது பக்கமாக முந்திச்செல்வதற்காக அறவிடப்படும் 25,000 ரூபா தண்டப்பணத்தில் திருத்தம்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2019 | 4:19 pm

Colombo (News 1st) வாகனங்களை இடது பக்கமாக முந்திச் செல்வதற்காக அறவிடப்படும் 25,000 ரூபா தண்டப்பணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கிடைத்துள்ள வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதற்கான வர்த்தமானி பத்திரத்தை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்து, கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஷோக் அபேசிங்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஏனைய வீதி ஒழுங்குமீறல்களுக்காக விதிக்கப்படும் 25,000 ரூபா தண்டப்பணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது எனவும் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்