துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பியல் புஷ்பகுமார விடுதலை

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பியல் புஷ்பகுமார விடுதலை

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பியல் புஷ்பகுமார விடுதலை

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2019 | 3:49 pm

Colombo (News 1st) துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பியல் புஷ்பகுமார விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொடயை சேர்ந்த 50 வயதான பியல் புஷ்பகுமார துபாயிலிருந்து நேற்று (18) அதிகாலை நாடு கடத்தப்பட்டார்.

இதேவேளை, நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர்களிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், இன்று அதிகாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவ பகுதியை சேர்ந்த 22 வயதான மொஹமட் அஃப்ரிடி மொஹமட் இன்ஹாம் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்