அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் விளையாடுதல் வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் விளையாடுதல் வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் விளையாடுதல் வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2019 | 8:57 pm

Colombo (News 1st) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் தொடர்பில் முன்னாள் தலைவரான அர்ஜூன ரணதுங்க கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டுள்ள குழாம் குறித்து பேசுவதற்கு பதிலாக குழாமில் தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதே இந்த சந்தர்ப்பத்தில் சிறந்ததாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கான சக்தியை வீரர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் குழாமில் பெயரிடப்பட்டுள்ள வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, நாட்டிற்குப் பெருமை​​யை ஈட்டிக்கொடுப்பதற்கான முனைப்புகளை மேற்கொள்ளுதல் வேண்டும் எனவும் அர்ஜூன ரணதுங்க வலியுறுத்தினார்.

டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றுள்ள அனைத்து அணிகளுக்கும் எதிராக விளையாட வேண்டும் என்பதால் அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல் விளையாடுதல் வேண்டும் எனவும் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்