அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்: ரஜினிகாந்த் அறிவிப்பு

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்: ரஜினிகாந்த் அறிவிப்பு

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்: ரஜினிகாந்த் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2019 | 5:32 pm

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் எனவும் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் எனவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனைக் கூறியுள்ளார்.

தற்போது நடைபெறும் 22 சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆளும் கட்சியின் பலம் குறைந்து சட்டசபை தேர்தல் நடந்தால் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர்,

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார். “அடுத்த ஓட்டு ரஜினிக்கே” என்று ஹேஷ்டேக் போட்ட ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்

என கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்