வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

by Staff Writer 18-04-2019 | 10:12 AM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நுகர்வோருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் கலாநிதி லலித் செனவீர தெரிவித்துள்ளார். பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தமை, மின் உபகரணங்களுக்கான உத்தரவாதம் இன்றி விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் விலைகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வர்த்தகர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 7,000 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 5,600 க்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.