புதிய வகையான ஆயுதப் பரிசோதனையில் வட கொரியா

புதிய வகையான ஆயுதப் பரிசோதனையில் வட கொரியா

by Chandrasekaram Chandravadani 18-04-2019 | 11:37 AM
Colombo (News 1st) புதிய வகையான ஆயுதம் ஒன்றைப் பரிசோதனை செய்துள்ளதாக, வட கொரியா தெரிவித்துள்ளது. இந்தப் பரிசோதனை குறித்த சில தகவல்களை அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் வௌியிட்டுள்ளபோதிலும், நீண்ட தூர ஏவுகணைப் பரிசோதனைக்கு சாத்தியமான இது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலான ஒன்றாகக் கருதப்படுவதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆயுதப் பரிசோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பார்வையிட்டதாகவும் அரச செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இது சக்தி வாய்ந்த போர் ஆயுதம் ஒன்றுடன் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பரிசோதனை இதுவாகின்றமை குறிப்பிடத்தக்கது.