புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 18-04-2019 | 6:03 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு தாம் எப்போதும் தயாராக உள்ளதாக, மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 02. கொழும்பு மாநகர ஆணையாளர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு ஏற்ப, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் சிபாரிசுகளை எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். 03. 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 04. கொள்ளுப்பிட்டியில், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 05. மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கர்சியா (Alan García) தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். 02. இந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது. 03. பொதுத்தேர்தல்களில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு அனுமதி வழங்கி, புதிய சட்டமொன்றை ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் சபை நிறைவேற்றியுள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை திமுத் கருணாரத்ன வழிநடத்தவுள்ளார். 02. ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கைக் குழாம் சீனாவுக்கு பயணமாகியுள்ளது.