தோணி கவிழ்ந்து விபத்து: தெமட்டகொட சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 18-04-2019 | 8:16 PM
Colombo (News 1st) பொத்துவில் - கொட்டுக்கல் களப்பில் தோணி கவிழ்ந்ததில் உயிரிழந்த சகோதரர்கள் இருவரின் சடலங்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. கொழும்பு - தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பமாக பொத்துவில்லுக்கு சுற்றுலா சென்றிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சகோதரர்கள் இருவரும் தமது பெரியப்பாவுடன் தோணியில் கொட்டுக்கல் களப்பில் பயணித்துள்ளனர். இதன்போது, யானை ஒன்றைக் கண்டு அச்சமடைந்த இரு சகோதரர்களில் ஒருவர் களப்பில் பாய்ந்துள்ளார். இதனால் தோணி கவிழ்ந்ததில் மற்றையவரும் களப்பில் வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். தோணியை செலுத்திச் சென்றவர் காலில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். 12 மற்றும் 17 வயதான சகோதரர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் உடல்கள் தெமட்டகொடயிலுள்ள அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டு, குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.