நாடு கடத்துவதைத் தவிர்க்குமாறு கோரி மதூஷ் தாக்கல் செய்த மனு விசாரணை

நாடு கடத்துவதைத் தவிர்க்குமாறு கோரி மதூஷ் தாக்கல் செய்த மனு விசாரணை

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2019 | 1:25 pm

Colombo (News 1st) இலங்கைக்கு நாடு கடத்துவதைத் தடுக்குமாறு கோரி, துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான மாகந்துரே மதூஷ், தாக்கல் செய்த மனு இன்று (18ஆம் திகதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பில் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக மாகந்துரே மதூஷ், குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள மனு தொடர்பில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, மாகந்துரே மதூஷூடன் கைது செய்யப்பட்டவர்களில், 23 பேர் இதுவரை நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் இன்று அதிகாலை நாடு கடத்தப்பட்டதுடன், அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பியல் புஷ்பகுமார மற்றும் மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்னர்.

எவ்வாறாயினும், பாடகர் அமல் பெரேராவை நாடு கடத்துவது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா, வாக்குமூலம் பெறுவதற்காக இன்று பிற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்