ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு டயன் கோமஸ் தெரிவு

ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு டயன் கோமஸ் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2019 | 1:36 pm

Colombo (News 1st) இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவரான டயன் கோமஸ் (Dian Gomes) ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆசிய குத்துச்சண்டை சம்மேளன அதிகாரிகளைத் தெரிவுசெய்யும் தேர்தல் தாய்லாந்தில் நேற்று (17ஆம் திகதி) நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் 17 நாடுகளைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

இதில் ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தின் புதிய தலைவராக கட்டாரின் யூசுப் அலி காசிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் நிறைவேற்றுக் குழுவுக்கு 10 பேர் தெரிவுசெய்யப்பட்டதுடன் இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத் தலைவரான டயன் கோமஸ் எட்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இலங்கை குத்துச்சண்டை விளையாட்டுக்கு பல வருடங்களாக சேவையாற்றிவரும் டயன் கோமஸ் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்