சிறுபோக செய்கைக்கு தேவையான உரம் இறக்குமதி

சிறுபோக செய்கைக்கு தேவையான உரம் இறக்குமதி

சிறுபோக செய்கைக்கு தேவையான உரம் இறக்குமதி

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2019 | 5:01 pm

Colombo (News 1st) சிறுபோக செய்கைக்கு தேவையான உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டவைகளில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் யூரியாவும் அடங்குவதாக செயலகத்தின் பணிப்பாளர் ஜகத் புஷ்பகுமார குறிப்பிட்டார்.

இதனைத் தவிர, 26,000 மெட்ரிக் தொன் டி.எஸ்.பி. உரம், 36,000 எம்.ஓ.பி உரம் ஆகியனவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இம்முறை 5 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

உரத்தை விநியோகிப்பதற்கான சுற்றுநிரூபம் மற்றும் திட்டங்களை விவசாய சேவை அலுவலகங்களுக்கும் அரச உர நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளதாக தேசிய உர செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் முதற்கட்ட விநியோகத்தை கடன் அடிப்படையில் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் செய்கைக்கு தேவையான உரம் தனியார் துறையூடாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்