ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2019 | 7:58 am

Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற 33ஆவது போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி, சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதேவேளை, நேற்றைய போட்டியில் டோனிக்கு ஓய்வளிக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா அணியை வழிநடத்தினார்.

துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷேன் வொட்சன் 31 ஓட்டங்களையும் பப் டு பிளசிஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், நடப்பு சம்பியனான சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 137 பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

ஜொனி பெயர்ஸ்டோ 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

9ஆவது ஆட்டத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு இது இரண்டாவது தோல்வி என்பதுடன் ஹைதராபாத் அணிக்கு நான்காவது வெற்றியாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்