உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: இலங்கைக் குழாம் அறிவிப்பு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: இலங்கைக் குழாம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2019 | 2:26 pm

Colombo (News 1st) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (18ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இலங்கைக் குழாத்தினரின் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஏஞ்சலோ மெத்யூஸ், லஹிரு திரிமான்ன, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, ஜெப்ரி வென்டர்சே, திசர பெரேரா, லசித் மாலிங்க, இசுரு உதான, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், ஜீவன் மென்டிஸ், மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இலங்கைக் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஓஷத பெர்னாண்டோ, ஏஞ்சலோ பெரேரா, கசுன் ராஜித, வனிந்து அசரங்க ஆகியோர் தயார்நிலை வீரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கைக் குழாத்தை வழிநடத்தும் வாய்ப்பை திமுத் கருணாரத்ன பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்