‘இராவணா 1’ செயற்கைக் கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது

‘இராவணா 1’ செயற்கைக் கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது

‘இராவணா 1’ செயற்கைக் கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2019 | 9:03 am

Colombo (News 1st) இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா 1’ செயற்கைக் கோள் இன்று (18ஆம் திகதி) அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

நாசா நிறுவனத்திற்கு சொந்தமான வேர்ஜினியாவிலுள்ள மத்திய அட்லாண்டிக் பகுதியில் வைத்து இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா விதானகே ஆகிய மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் இருவரே, இந்த ‘இராவணா 1’ செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஜப்பானின் கியூஷு தொழில்நுட்ப நிறுவனத்தில், பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

இன்று அதிகாலை 2.16 மணியளவில் ஏவப்பட்ட செயற்கைக்கோளானது, நாளை மாலை 6.30 மணியளவில் விண்வௌியை அடையவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்